டெல்லி தேர்தல் கருத்துக் கணிப்புகளை நிராகரிக்க மோடி வேண்டுகோள்

By பிடிஐ

டெல்லியில் நடைபெறவுள்ள‌ தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறித்து பல்வேறு அமைப்புகள் மேற் கொண்டு வரும் கருத்துக் கணிப்பு களில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பாண்மை ஆதரவு உள்ளது. ஆனால் ‘இத்தகைய கருத்துக் கணிப்புகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தேர்தல் கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய்யானவை. இதே போல கடந்த தேர்தலில் 50க்கும் அதிகமான இடங்களை ஆம் ஆத்மி கட்சி பிடிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் களால் அவ்வாறு செய்ய முடிய வில்லை.

அதேபோல நான் வாரணாசியில் இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, மூன்று லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைவேன் என்று கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால் அது பொய்த்துப்போனது.

ஆம் ஆத்மி கட்சிக்கு சந்தேகத் துக்கு இடமளிக்கும் வகையில் நன்கொடைகள் வருகின்றன. அதைப் பற்றி விசாரித்தபோது, மகாத்மா காந்தி மற்றும் ஒபாமா கூட அவர்களுக்கு நன்கொடை அளித்திருப்பதாகக் கணக்குக் காட்டுவதாக எனக்குத் தகவல் கிடைத்தது.

பொதுவாழ்வில் இத்தகைய பொய்களுக்கு இடம் இருக்கக் கூடாது. என்னுடைய அரசியல் என்பது வளர்ச்சி மட்டும்தான். குழந்தைகளுக்கு நல்ல கல்வியும், அவர்களின் பெற்றோர்களுக்கு மருந்துகளும், இருப்பதற்கு நல்ல காரை வீடுகளும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

சினிமா

11 mins ago

இந்தியா

33 mins ago

சினிமா

43 mins ago

தமிழகம்

59 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்