கல்விக்கான கூடுதல் வரியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என புகார்: விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

கல்விக்காக மத்திய அரசு வசூ லிக்கும் கூடுதல் வரியில் (செஸ்), தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக செலவிடப் படவில்லை என்று தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வருமான வரி செலுத்து வோரிடம் கல்விக்காக மத்திய அரசு கூடுதல் வரி வசூலிக்கிறது. பின்னர் இத்தொகையை அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ‘கேடலிஸ்ட் டிரஸ்ட்’ என்ற சமூகநல அமைப்பின் நிர்வாக இயக்குநர் எஸ்.ப்ரியா தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அவர் தனது புகாரில், “பள்ளிகளில் கழிப்பறை உட்பட அத்தியாவசிய வசதிகள் செய்து தரவும் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகவும் மத்திய அரசு கூடுதல் வரி வசூலிக்கிறது. இவ்வாறு வசூலித்து தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் பெரும்பகுதி பயன் படுத்தப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்தப் புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் விசாரித்த அதன் உறுப் பினரான நீதிபதி டி.முருகேசன், இதன் மீது விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செய லாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி முருகேசன் தனது உத்தரவில், “அரசியலமைப்பு சட்டம், 21ஏ- பிரிவின் கீழ் உறுதி யளிக்கப்பட்டுள்ள கல்விக்கான உரிமையில், கல்வி கற்க உகந்த சூழ்நிலையைப் பெறுவதற்கும் மாணவர்களுக்கு உரிமை உள்ளது. இந்த உரிமை அனைத்து மாணவர்களுக்கும் உறுதி செய்யப்படவேண்டும்.

இதற்காக கூடுதல் வரி வசூலிக்கும்போது அரசின் பொறுப்பு அதிகமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கூடுதல் வரியில் தமிழ கத்துக்கான ஒதுக்கீட்டில் பள்ளிகள் மேம்பாட்டுக்கு தமிழக அரசால் பயன்படுத்தப்பட்ட தொகை எவ்வளவு? செலவிடப் படாத தொகை எவ்வளவு? அந்த தொகையை கழிப்பறை வசதி அளிப்பது உட்பட பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசு எவ்வாறு செலவிட உத்தேசித்துள்ளது? என் றும் கேள்விகள் எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

கல்வி

12 hours ago

மேலும்