சொத்து குவிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?- சுதாகரன், இளவரசி வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி

By இரா.வினோத்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுதாகரன்,இளவரசியின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மூத்த வழக்கறிஞருமான சுதந்திரம், அசோகன் ஆகியோர் ஆஜராகினர்.

இதையடுத்து 5-ம் நாளாக வழக் கறிஞர் சுதந்திரம் வாதிட்டதாவது:

சுதாகரன், இளவரசிக்கு சொந்த மாக சிறுதாவூரில் உள்ள‌ பங்க ளாவை 1997-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மதிப்பீடு செய்தது. அப்போது அதன் மதிப்பு ரூ.5.40 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் அவர்கள் மதிப்பீடு செய்தபோது அங்கு கட்டிடம் முழுமையாக கட்டப்படவில்லை.இருப்பினும் தோராயமாக மதிப்பீடு செய்ததாக‌ அரசு தரப்பு சாட்சி எண் 107-ல் இருந்து 120 வரையிலான சாட்சிகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் சிறுதாவூர் பங்களாவை மதிப்பீடு செய்ததில் நிறைய குளறு படி நடந்துள்ளது. உதாரணமாக ரூ.80 (சதுர அடி) மதிப்புள்ள சலவைக் கல்லை ரூ.20,675 (சதுர மீட்டர்) என மதிப்பீடு செய்துள்ளனர். இதேபோல வெள்ளை சலவைக் கல்லை ரூ.20,775 எனவும் மதிப்பிட் டுள்ளனர்.

அரசு தரப்பு சாட்சிகளின் வாக்கு மூலம் குறித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகரன், இளவரசி யிடம் கேள்வி எழுப்பவில்லை. அவ்வாறு கேட்கப்படாத குற்றச் சாட்டை ஆதாரமாக கொண்டு தீர்ப் பளிக்கக் கூடாது. ஆனால் இவ்வழக் கில் இத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றார்.

ஆதாரங்கள் எங்கே?

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “அரசு தரப்பு சாட்சியங்களின் அடிப் படையில் இளவரசியிடம் சுமார் 650 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில் 95 சதவீதத்துக்கும் அதிகமான கேள்விகளுக்கு, `ஆம், இல்லை' என்று மட்டுமே பதில் அளித்துள்ளார்.போதிய விளக்கம் அளிக்கவில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இளவரசி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தை படியுங்கள்'' என்றார்.

இதையடுத்து வழக்கறிஞர் சுதந்திரம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியின் கேள்வி களுக்கு இளவரசி அளித்த பதில் முழுவதையும் படித்தார். மேலும் வெள்ளிக்கிழமை சுதாகரன், இளவரசியின் சொத்து பட்டியலை தனித்தனியாக தாக்கல் செய் வதாகவும் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, “குற்றவாளிகள் தரப்பில் வாய்மொழியாக முன் வைக்கும் வாதங்களை வைத்து தீர்ப்பு வழங்கமுடியாது. ஆதாரங் கள்,ஆவணங்கள் மற்றும் சாட்சி கள் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கமுடியும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது வருமானத்தை பயன்படுத்தி சசிகலா, சுதாகரன், இளவரசி சொத்து குவித்தார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. அதனை எப்படி ஆதாரத்துடன் பொய் என நிரூபிக்க போகிறீர்கள்?

சுதாகரனும் இளவரசியும் சட்டவிரோதமாக சொத்து குவிக்க வில்லை என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம், ஆவணங்கள் இருக்கின்றன? அந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கும் எந்த ஆதார மும் ஆவணத்தையும் நீங்கள் இதுவரை தாக்கல் செய்யவில்லை'' என நீதிபதி குமாரசாமி தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு(இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

வர்த்தக உலகம்

17 mins ago

தமிழகம்

43 mins ago

சினிமா

38 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்