இஸ்ரோ புதிய தலைவராக ஏ.எஸ்.கிரண்குமார் நியமனம்

By இரா.வினோத்

இஸ்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராகவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் செயலாளராகவும் கர்நாடகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஏ.எஸ்.கிரண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங் களுக்கான மத்திய குழு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த கே.ராதா கிருஷ்ணன் கடந்த டிசம்பர் 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.இதையடுத்து அந்த பதவிக்கு அகமதாபாத் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் மற்றும் ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் தலைவர் எம்.ஒய்.எஸ்.பிரசாத் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய குழு, ஏ.எஸ்.கிரண்குமாரை இஸ்ரோ நிறுவனத்தின் புதிய தலைவரா கவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறையின் செயலாள ராகவும் நியமித்துள்ளது. 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படை யில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த விஞ்ஞானியான கிரண்குமார் பெங்களூர் பல் கலைக் கழகத்தில் இயற்பியல் பயின்றவர். கடந்த 1975-ம் ஆண்டு இஸ்ரோவில் இளம் விஞ்ஞானி யாக பணியில் இணைந்தார். 1979-ம் ஆண்டு செலுத்தப்பட்ட பாஸ்கரா செயற்கைக்கோள் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். இதே போல சந்திரயான்-1, மங்கள்யான் ஆகிய திட்டங்களிலும் முக்கிய ப‌ங்குவகித்துள்ளார். இதனால் இவருக்கு 2014-ம் ஆண்டு பத்ம விருது வழங்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி கிரண்குமார் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், பெங்க ளூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்