பாஜக - பிடிபி அடுத்த வாரம் அதிகாரபூர்வ பேச்சு

By பிடிஐ

காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர் பாக மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), பாஜக இடையே அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று அந்த மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

இதுதொடர்பாக இரு கட்சி களிலும் உயர்நிலைக் குழு அமைக்கப் பட்டுள்ளது. பிடிபி ஏற்கெனவே விதித்துள்ள ஐந்து நிபந்தனைகள் தொடர்பாக பாஜகவிடம் இருந்து திடமான உறுதிமொழிகளை எதிர்பார்ப் பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிடிபி மூத்த தலைவர் ஒருவர் கூறியபோது, கூட்டணி என்பது முதல்வர் பதவியை குறிவைத்து இருக்காது, மாநிலத்தில் நல்லாட்சி வழங்குவதை அடிப்படையாக வைத்தே அமையும் என்று தெரிவித் தார். அநேகமாக அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை இரு கட்சிகளின் உயர்நிலைக் குழுக் களும் அதிகாரபூர்வமாக பேச்சு வார்த்தையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிடிபி நிபந்தனைகள்

பிடிபி-யின் சுயாட்சியில் தலை யிடக்கூடாது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப் பிரிவை நீக்கக்கூடாது, அதனை வலுப்படுத்த வேண்டும். அமைதி நிலவும் பகுதிகளில் இருந்து ஆயுதப் படை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். 6 ஆண்டுகளுக்கும் பிடிபி மூத்த தலைவர் முப்தி முகமது சையதுவே முதல்வராக நீடிக்க வேண்டும். காஷ்மீர் வெள்ள நிவாரண பணிகளுக்கு சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும் ஆகிய 5 நிபந்தனைகளை பிடிபி விதித்துள்ளது.

ஜம்மு பகுதியைச் சேர்ந்த ஒருவரே மாநில முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே பாஜக வலியுறுத்தி வருகிறது. மேலும் 370 சட்டப்பிரிவை வாபஸ் பெற வேண்டும் என்றும் அந்த கட்சி நீண்ட காலமாக கூறிவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

15 mins ago

க்ரைம்

19 mins ago

இந்தியா

17 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்