பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கொடுக்கும் பெண்கள் மீது நடவடிக்கை: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

பாலியல் பலாத்காரம் நடந்ததாக பொய் புகார் கொடுக்கும் பெண்கள் மீது நீதிமன்றங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம் வந்துள்ளதாக டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி தொழிலதிபர் ஒருவர் மீது பொய்யாக பாலியல் பலாத்கார புகார் சொன்ன பெண் சம்பந்தப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை அது பிறப்பித்தது.

மேலும் பொய் புகார் கொடுத்த அந்த பெண் மீது புகார் பதிவுசெய்யும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.

டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விரேந்திர பட் வழக்கின் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

தனிப்பட்ட விரோதத்தை தீர்த்துக்கொள்வதற்காக, ஒருவரின் தூண்டுதலின்பேரில் டெல்லி தொழிலதிபர் மீது பொய் சாட்சியம் சொன்ன பெண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அது கடமை தவறுவதாகும்.

குற்றம் சுமத்தப்பட்ட தொழிலதி பர் நிரபராதி. அவரை விடுவிக்க வேண்டும்.அவர் மீது பொய் புகார் சுமத்தப்பட்டுள்ளது உறுதியாகிறது. தொழிலதிபர் மீதுள்ள முன்விரோ தத்தை தீர்த்துக்கொள்ள அந்த பெண்ணை ஒரு நபர் பகடைக் காயாக பயன்படுத்தி இருக்கிறார்.

பொய் புகார் கொடுத்து நிரபராதி களை வேதனைக்கு உள்ளாக்கும் பெண்களை உரிய சட்டத்தி்ன்படி கடுமையாக தண்டிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய்யாக வரும் வழக்குகள் எண்ணிக்கை இப்போது அதிகரித் திருக்கிறது. பலாத்கார வழக்கில் நீதிமன்றமே விடுவித்தாலும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரியாதை கிடைப்பதில்லை. இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்