கூகுளில் இந்தியர்களின் தேடல்: ஐஆர்சிடிசி முதலிடம் - மோடியை முந்திய சன்னி லியோன்

By செய்திப்பிரிவு

கூகுள் தேடுபொறியில் 2014-ம் ஆண்டு இந்தியர்கள் அதிகம் தேடிய வார்த்தைகள் பட்டியலில் இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி முதலிடம் பிடித்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்காக இந்த இணையதளத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியர்கள் அதிகம் தேடிய வார்த்தைகள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இணையதளம் மூலம் பொருட்களை விற்கும் பிளிப்கார்ட் இரண்டாவது இடத்தையும், எஸ்பிஐ ஆன்லைன் மூன்றாவது இடத்தை யும், ஸ்னாப்டீல், பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் ஆகியவை முறையே 4,5 வது இடத்தையும் பிடித்துள்ளன. எச்டிஎப்சி நெட்பேங்கிங் 6-வது இடத்தில் உள்ளது.

2014-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தற்கால நிகழ்வுகள் வரிசையில் இந்திய மக்களவைத் தேர்தல் 2014, பிபா உலகக் கோப்பை கால்பந்து 2014, ஐபோன் 6, கேட் தேர்வு 2015, நரேந்திர மோடியின் பெயர் ஆகியவை முறையே முதல் 5 இடங்களை பெற்றுள்ளன.

பிரபலமான தனிநபர்கள் தேடப் பட்ட வரிசையில் ஆபாச பட நடிகையாக இருந்து இந்திய திரையுலகுக்கு வந்த சன்னி லியோன் முதலிடத்தை பிடித் துள்ளார். இந்த வரிசையில் நரேந்திர மோடி 2-வது இடத்தில் உள்ளார்.

அதிகம் தேடப்பட்ட திரைப்படங் கள் வரிசையில் சன்னி லியோன் நடித்த ராகிணி எம்எம்எஸ்-2 திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.

அதிகம் தேடப்பட்ட ஹிந்தி நடிகர்களில் சல்மான் கானும், நடிகைகளில் காத்ரீனா கைப்பும் முதல் இடம் பிடித்துள்ளனர்.

அதிகம் தேடப்பட்ட செல்போன்களில் மோட்டோ ஜி முதலிடத்திலும், ஆப்பிள் ஐபோன் 6, 2-வது இடத்திலும் உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 5, மோட்டோ இ, நோக்கியா எக்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்