தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 70 சதவீத வேலைவாய்ப்பு: புதிய சட்டம் இயற்ற ம.பி. அரசு பரிசீலனை

By செய்திப்பிரிவு

கடந்த பிப்ரவரியில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் வெளி யிட்ட உத்தரவில், "மத்திய பிரதேச தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் மாநில இளைஞர் களுக்கு 70 சதவீத ஒதுக்கீடு வழங்காத தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு அரசு தரப்பில் எவ்வித சலுகையும் வழங் கப்படாது" என்று அறிவித்தார். அப்போது முதலே தனியார் துறையில் மாநில இளைஞர் களுக்கு 70 சதவீத ஒதுக்கீடு வழங் கும் முறை அதிகாரபூர்வமற்ற முறையில் அமலில் இருக்கிறது.

இந்நிலையில் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் முதல்வர் கமல்நாத் நேற்று பேசியதாவது:

வேலைவாய்ப்பில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசின் கொள்கையால் பிஹார், உத்தர பிரதேச தலைவர் கள் என் மீது பல்வேறு விமர் சனங்களை முன்வைத்துள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு கள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்படுகின்றன. அந்த மாநிலங் களின் அரசுப் பணிகளில் மத்திய பிரதேச இளைஞர்கள் சேருவது கடினம். எனவே மத்திய பிர தேசத்தின் அரசுப் பணிகளில் மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் மத்திய பிரதேசத்தில் செயல்படும் தனியார் நிறுவனங் களில் மாநில இளைஞர்களுக்கு 70 சதவீத வேலைவாய்ப்பை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்