3 ஆண்டு பாஜக ஆட்சி எப்படி?- கருத்துக் கேட்க தனி செயலி தொடங்கினார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் மூன்றாண்டு செயல்பாடுகள் குறித்து கருத்து கணிப்பில் பங்கேற்று பொது மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அரசு குறித்து இரண்டு கேள்விகளையும் மொபைல் செயலியில் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளார்.

தனது தலைமையிலான அரசு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதில் 'இந்த 3 ஆண்டுகளில் நாடு மிக வலுவான அடித்தளங்களில் காலடி எடுத்து வைத்துள்ளது, அந்த முயற்சிகள் மக்களின் வாழ்வை உயர்த்தியுள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு துறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பட்டியலிட்டுள்ளார். மார்ச் 2014-ம் ஆண்டு அந்தத் துறை இருந்த நிலையோடு தற்போதைய நிலையை ஒப்பிட்டு புள்ளிவிவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

’மக்களிடம் அரசுக்கான ஒத்துழைப்பு இருக்கிறது, நம்பிக்கை இருக்கிறது அதனால் வளர்ச்சியும் சாத்தியமாகியுள்ளது’ என்று பிரதமர் நரேந்திர மோடி தனது அரசின் 3 ஆண்டு நிறைவு நாளில் பதிவிட்டுள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்