குழந்தைக்கு தவறான சிகிச்சை பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவு

By பிடிஐ

தவறான கண் அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவமனை, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் தர வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்பு உத்தர விட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பெண் குழந்தை பிரியங்கா. கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரியங்காவின் இடது கண்ணில் அடிபட்டு காயம் ஏற் பட்டது. உடனடியாக டெல்லி யில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் பிரியங்காவை அவளது பெற்றோர் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பிரியங்காவின் இடது கண் விழிவெண் படலத்தில் 3 அறுவை சிகிச்சைகள் செய்தனர். கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அந்த 3 அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிரியங்காவின் இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தெற்கு டெல்லி மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்பில் பிரியங்காவின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இந்த வழக்கு கடந்த 18 ஆண்டு களாக நடந்து வந்தது.

இந்நிலையில், தகுந்த பராமரிப் பும் எச்சரிக்கையும் இல்லா மல், சிறுமியின் இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட் டுள்ளது. அதனால் பார்வை பாதிக் கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்