ரயில்வே பட்ஜெட் ரத்து?- பொது பட்ஜெட்டுடன் தாக்கலாகும்

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் பட்ஜெட் இரண்டு பாகங்களாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. முதலா வதாக ரயில்வே துறைக்கான பட்ஜெட்டும், அதன்பின் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1924-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் பொது மக்களின் பயணத்துக்காக அதிக அளவிலும், சரக்கு போக்கு வரத்துக்காக குறைவான அளவிலும் ரயில் சேவை பயன் படுத்தப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. எனவே, காலத்துக்கு ஏற்றவாறு ரயில் பட்ஜெட்டை மாற்றுவதுடன், அந்தத் துறையில் பல சீர்திருத்தங்களையும் மேற் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, ‘தி இந்து’விடம் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது:

இப்போது, ரயில்வே துறையைவிட ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஆனால், அத்துறைக்காக தனியாக பட்ஜெட் சமர்ப்பிக்கப் படுவதில்லை. இந்த மாற்றத்துக்குப் பின் சட்ட சிக்கல்கள் எழுந்தால் அதை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சட்டத்திலும் சில திருத்தங்களை செய்ய வேண்டியிருக்கும். இந்த நடை முறைகள் விரைவில் முடிந்து விட்டால் வரும் நிதி ஆண்டிலேயே பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்து தாக்கல் செய்யும் புதிய முறை நடைமுறை அமலுக்கு வந்து விடும்.

ரயில்வே அதிகாரிகள் இடையே அரசியல் அதிகமாகி எந்த ஒரு முக்கியப் பணியையும் உடனடியாக நிறைவேற்ற முடியாமல் உள்ளது. இதை ஒழிக்க ரயில் பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைப்பது பயன் தரும். இத்துடன் செய்ய இருக்கும் சீர்திருத்தங்களில் வெளியில் இருந்து கிடைக்கும் ஆலோசனைகளின் பேரில் ரயில்வே செயல்பட உள்ளது. அதை செயல் படுத்தும் பணி மட்டும் ரயில்வேயிடம் இருக்கும்.

இந்தப் பணிகளுக்கு அத்துறை யின் சங்க நிர்வாகிகளிடம் கடும் எதிர்ப்புகள் வரும் என அரசு எதிர்பார்க்கிறது. இவர்களை சமாளிக்க முடியாமல் திணறி யதால்தான் அதில் மத்திய அமைச்சராக இருந்த சதானந்த கவுடா மாற்றப்பட்டு சுரேஷ் பிரபு கொண்டு வரப்பட்டிருக்கிறார். இவரது தலைமையில் ரயில்வே யில் பல அதிரடி மாற்றங்கள் வருவது உறுதி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

விளையாட்டு

52 mins ago

க்ரைம்

56 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்