தூ விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜயகாந்த்

By செய்திப்பிரிவு

பத்திரிகையாளர்களை 'தூ..' என விமர்சித்ததற்காக இந்தியன் பிரஸ் கவுன்சிலிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வழக்கறிஞர் மூலம் மன்னிப்பு கேட்டார்.

கடந்த 2015 டிசம்பர் மாதம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது கோபமைடந்து 'தூ' என விமர்சித்தார். இதற்காக பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

தனது செயலுக்கு விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் டெல்லியில் உள்ள இந்திய பிரஸ் கவுன்சிலிடம் விஜயகாந்த் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்திய பிரஸ் கவுன்சிலில் விஜயகாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, பத்திரிகையாளர்களை 'தூ' என விமர்சித்ததற்காக விஜயகாந்த் சார்பில் மன்னிப்பு கேட்டார். சேலத்தில் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதற்காகவும் வருத்தம் தெரிவித்தார்.

இதனை ஏற்று விஜயகாந்த் மீதான வழக்கை முடித்து வைப்பதாக இந்திய பிரஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

தமிழகம்

36 mins ago

சினிமா

40 mins ago

கல்வி

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்