ராணுவ முகாம் மீது திடீர் தாக்குதல்: காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

By செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அப்போது இருதரப்புக்கும் ஏற்பட்ட சண்டையில் 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் குட் பகுதியில் அமைந்துள்ள சி.ஆர்.பி.எப். முகாம் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஊடுருவி இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே எல்லையில் பாதுகாப்பு அதிகரிக் கப்பட்டுள்ளது.

குப்வாரா மாவட்டம் மேச்சில் பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீரில் இருந்து ஏராள மான தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன் றனர். இதை கண்காணித்த ராணுவ வீரர்கள் அவர்களை எச்சரிக்கை செய்தனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த சண்டை சில மணி நேரம் நீடித்தது. இறுதியில் பாதுகாப்புப் படையினரின் தாக் குதலை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் மீண்டும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் பின்வாங்கினர்.

இதுகுறித்து ராணுவ வட்டாரங் கள் கூறியபோது, தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 2 வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்று தெரிவித்தனர்.

காஷ்மீர் நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் நேற்று ஆய்வு செய்தார். நகர் சென்ற அவர் அந்த மாநில முதல்வர் மெகபூபா முப்தியை சந்தித்துப் பேசினார்.

வரும் ஜூலை 2-ம் தேதி அமர்நாத் புனித யாத்திரை தொடங்குகிறது. 48 நாட்கள் புனித யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆளுநர், முதல்வருடன் தலைமை தளபதி ஆலோசனை நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அனந்தநாக் சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் 22-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு குறித்தும் ராணுவ தளபதி விரிவான ஆலோசனை நடத்தினார். அனந்தநாக் தொகுதியில் முதல்வர் மெகபூபா முப்தி போட்டியிடுகிறார்.

வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ். ஹுடாவுடன் தலைமை தளபதி தல்பீர் சிங் விவாதித்தார். அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய அவர், எத்தகைய தீவிரவாத அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தினார்.

முன்னதாக காஷ்மீர் நிலவரம் குறித்து அந்த மாநில ஆளுநர் என்.என்.வோராவுடன் தலைமை தளபதி டெல்லியில் நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

18 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

12 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

26 mins ago

வலைஞர் பக்கம்

30 mins ago

சினிமா

35 mins ago

சினிமா

40 mins ago

இந்தியா

48 mins ago

க்ரைம்

45 mins ago

மேலும்