இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்: மோடி அஞ்சலி

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ட்விட்டரில் அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் 110 மாடி இரட்டை கோபுரம் மீது அல்-காய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தனர். இதில் 3000 பேர் உயிரிழந்தனர். 6000 பேர் படுகாயமடைந்தனர். அதன் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''செப்டம்பர் 11-ம் தேதி இரண்டு மாறுபட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. ஒன்று சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 11-ல் சிகாகோ மாநாட்டில் உரையாற்றினார். 2001 செப்டம்பர் 11-ல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் பலியாகினர். அவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

தமிழகம்

5 mins ago

சினிமா

9 mins ago

கல்வி

14 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்