அசாம் ரயிலில் 7 கிலோ வெடிகுண்டு சிக்கியது: உளவுத்துறை தகவலால் ரயில் பயணிகள் உயிர் தப்பினர்

By பிடிஐ

அசாம் மாநிலத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 7 கிலோ வெடிகுண்டு சிக்கியது. உரிய நேரத்தில் இந்த குண்டு கண்டு பிடிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள் உயிர் தப்பினர்.

அசாம் மாநிலத்தில் இயக் கப்படும் லும்டிங்-காமாக்யா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ரங்கியா மாவட்டம், கெண்டுகோனா ரயில் நிலையத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகளை வெளியேற்றிய பின்னர் ரயில்வே பாதுகாப்பு படையினரும் மாநில போலீஸாரும் ரயில் பெட்டிகளை அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியின் கழிவறையில் பிளாஸ்டிக் பை கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பைக்குள் 7 கிலோ வெடிகுண்டு இருந்தது. அதனை கைப்பற்றிய போலீஸார், காலியிடத்தில் வெடிக்கச் செய்து அழித்தனர்.

ரயிலில் வெடிகுண்டு வெடித்தி ருந்தால் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும், உரிய நேரத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

வர்த்தக உலகம்

30 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

51 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்