ஜாகீர் நாயக்கிற்கு உ.பி. உலமா கவுன்சில் ஆதரவு: ஷியா முஸ்லிம் தலைவர் எதிர்ப்பு

By ஆர்.ஷபிமுன்னா

தீவிரவாதம் குறித்த கருத்துகளால் சர்ச்சையில் சிக்கியுள்ள ஜாகீர் நாயக்குக்கு உத்தரப்பிரதேச அரசியல் அமைப்பான ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் ஆதரவு அளித்துள்ளது. அதேவேளையில் இம் மாநிலத்தின் ஷியா பிரிவு தலைவரான கல்பே ஜாவீத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் உலமா கவுன்சில் தலைவரான மவுலானா அமீத் ரஷீதி கூறும் போது, “ஊடகங்கள் நடத்திய விசாரணைகளுக்கு ஜாகீர் நாயக் பலியாக்கப்பட்டுள்ளார். இதுபோல் ஒருவர் மீது கிளம்பும் ஆதாரமற்ற புகார்களை ஊடகங் கள் விசாரிப்பதும் பிறகு அவர் மீது அரசு வழக்குகள் பதிவு செய்து சிறையில் தள்ளுவதும் வழக்கமாகி விட்டது. சமூக வலை தளங்களின் குறிப்பிட்ட பதிவு அல்லது பக்கங்களுக்கு ‘லைக்’ கொடுப்பதன் மூலம் எந்தவொரு முஸ்லிம் பிரச்சாரகர் மீதும் தீவிரவாத தொடர்பு குற்றச்சாட்டு களை கூற முடியாது. ஜாகீரின் ‘பீஸ் டிவி’யை தடை செய்வதற்கு முன், அது தொடர்பாக அரசு விசாரணை நடத்தியிருக்க வேண்டும். இவரது இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷனுக்கு வந்த நன்கொடைகள் மீது விசாரணை நடத்தி வரும் மகராஷ்டிர மற்றும் மத்திய அரசுகள் ஆதாரங்கள் கிடைத்தால் அவர் மீது நட வடிக்கை எடுக்கலாம்” என்றார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ஆசம்கர் நகரின் முஸ்லிம் இளைஞர்கள் பலர் மீது தொடர்ந்து தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்களும் கைதாகி சிறை யில் உள்ளனர். மேலும் கடந்த 2008-ல் டெல்லி பட்லா ஹவுஸில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாரால் என்கவுன்ட்டர் நடைபெற்றது. இவற்றை கண் டித்து ஆசம்கர் நகர சன்னி முஸ்லிம் பிரிவு மவுலானாக்களால் உருவாக் கப்பட்ட அரசியல் கட்சியே ராஷ்ட் ரிய உலமா கவுன்சில். 2012-ல் உ.பி. சட்டப்பேரவைக்கும் 2014-ல் மக்களவைக்கும் போட்டியிட்ட இக்கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. எனினும் மக்களவை தேர்தலில் உ.பி.யில் முலாயம்சிங் வென்ற போது 3வது இடத்தை (2வது இடம் பாஜக) உலமா கவுன்சில் வேட்பாளர்கள் பலர்பெற்றனர்.

இதற்கிடையே ஷியா பிரிவு முஸ்லிம்களின் மூத்த தலைவரான மவுலானா கல்பே ஜாவீத், ஜாகீர் நாயக் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸில் கனரக வாகனம் ஏற்றி 84 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவர் வன்மையாக கண்டித்தார். உலகம் முழுவதும் வஹாபி இஸ் லாம் பிரிவினரே மனித சமூதாயத் தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருகின்றனர் என கல்பே ஜாவீத் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, “வஹாபிக்களின் பிரச்சார கர்களில் ஒருவரான ஜாகீர் நாயக் போன்றவர்களின் பேச்சுகள், சமூக, மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் நேர்மை ஆகியவற்றின் முக்கிய எதிரியாக உள்ளது. இவர், சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக வெறுப்புகளை பரப்பி வருகிறார். இதனால் சன்னி பிரிவு இளைஞர்களிடம் தீவிரவாதக் கொள்கைகளை வளர்க்கும் வஹாபிஸம் பரவி வருகிறது. இதைத் தடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

தமிழகம்

28 mins ago

வணிகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்