பஞ்சாப் மாநில புதிய ஆளுநராக வி.பி.சிங் பத்னோர் பொறுப்பேற்பு

By பிடிஐ

பஞ்சாப் மாநில புதிய ஆளுநராக வி.பி.சிங் பத்னோர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சண்டீகரில் உள்ள பஞ்சாப் ராஜ்பவனில் பத்னோருக்கு, பஞ்சாப் ஹரியானா உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.ஜே.வாஸிஃப்தர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

பஞ்சாப் மாநில ஆளுநர் பதவியுடன், சண்டீகர் யூனியன் பிரதேச நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றுள்ள பத்னோருக்கு, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வாழ்த்து தெரிவித்தார்.

ஹரியானா ஆளுநரான கப்டன் சிங் சோலங்கி, கடந்த 2015-ம் ஆண்டு முதல் பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டீகர் நிர்வாகப் பொறுப் பையும் கூதலாக கவனித்துவந்தார். இவருக்குப் பதிலாக தற்போது பத்னோர் பதவியேற்றுள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பாஜக சார்பில் 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்னோர் (69), பில்வாரா பகுதியைச் சேர்ந்தவர். மாநில அமைச்சராகவும் பதவி வகித்த இவர், 2 முறை மக்களவை உறுப்பினராகவும், ஒரு முறை ராஜ்யசாப உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்