உ.பி.யில் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் மாணவி தற்கொலை

By பிடிஐ

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் குடும்ப வறுமையின் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

கான்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்துள்ளார் மாணவி யாஸ்மின் (18). யாஸ்மினின் தந்தை யாகூப் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். யாஸ்மினின் பள்ளியில் 1,500 ரூபாய் கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்தச் சொல்லி அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.

குடும்ப வறுமை காரணமாக யாஸ்மினின் தந்தையால் கல்விக் கட்டணத்தை உடனடியாக கட்ட இயலவில்லை. இதனால் மனமுடைந்த யாஸ்மின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் விஷம் அருத்தியுள்ளார். மயங்கிய நிலையிருந்த மாணவியை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி யாஸ்மின் உயிரிழந்தார்.

இது குறித்து யாஸ்மினின் தந்தை யாகூப் கூறுகையில், ''எங்களால் பள்ளி நிர்ணயித்த தேதிக்குள் உரிய கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. இதனால் என் மகள் மனமுடைந்து காணப்பட்டாள். ஆனால் என் மகள் தற்கொலை முடிவை எடுப்பாள் என நான் எதிர்பார்க்கவில்லை'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

க்ரைம்

15 mins ago

சுற்றுச்சூழல்

51 mins ago

க்ரைம்

55 mins ago

இந்தியா

53 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்