சிபிஎம் இளைஞர் பிரிவின் மேற்கு வங்க மாநாட்டை நாளை தொடங்குகிறார் பிரகாஷ் ராஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவாக இருப்பது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ). மேற்கு வங்கத்தின் ஹுக்ளி மாவட்டம் தன்குனியில் அதன் மாநில மாநாடு நாளை (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ளது. பெரும்பாலும் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் அல்லது டிஒய்எப்ஐ யின் முன்னாள் தலைவர்கள் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் இந்தமுறை பிரகாஷ்ராஜ் அழைக் கப்பட்டிருக்கிறார். இதன்மூலம், பிரகாஷ்ராஜ் அரசியலுக்கு வருவாரா எனும் கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டிஒய்எப்ஐயின் மேற்கு வங்க மாநில தலைவரான சாயன்தீப் மித்ரா கூறும்போது, ‘ஒரு திரைப்பட நடிகரை நாங்கள் முதன்முறையாக அழைத்துள் ளோம். கலைத்துறையில் அவர் தேசிய அளவில் பாஜக உள்ளிட்ட இந்துத்துவாவின் எதிர்ப்பு முகமாக உள்ளார். மதவாத சக்திகளை எதிர்க்கும் அவரது பேச்சுக்கள் நம் நாட்டின் இளைஞர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. அரசியலில் நுழைந்து எந்த கட்சியிலும் சேர்வது அவரது சொந்த விருப்பம். அதை பற்றி நாங்கள் அவரிடம் எதுவும் கேட்க விரும்பவில்லை’ எனத் தெரிவித்தார்.

கடந்த வருடம் தனக்கு நெருக்க மான முற்போக்கு எழுத்தாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல் லப்பட்டதால் கொதித்து எழுந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இதன் காரணமாக, அவரை காங்கிரஸ் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு அரசியல் கட்சிகள் இழுக்க முயன் றன. ஆனால், எவரிடமும் பிடி கொடுக்காத பிரகாஷ்ராஜ், சமீபத் தில் முடிந்த கர்நாடகா சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்தார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பிரகாஷ்ராஜுக்கு நெருக்கமான நட்பு வட்டாரங் கள் கூறும்போது, ‘காங்கிரஸ் உட்பட யார் அழைத்தாலும் அதன் மேடைகளில் பிரகாஷ் ராஜ் பேசத் தயாராக உள்ளார். இளைஞர்களைக் கவரும் வகையி லான பொதுமக்கள் பிரச்சனை களில் கலந்துகொள்வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ள தால் மக்களவைத் தேர்தலிலும் அவரது பாஜக எதிர்ப்பு பிரச்சாரம் தொடரும்’ எனத் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

30 mins ago

கருத்துப் பேழை

51 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்