போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க 10 மாநிலங்களில் வானொலியில் வாட்ஸ்-அப் நிறுவனம் பிரச்சாரம்

By பிடிஐ

போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க, மேலும் 10 மாநிலங்களில் வானொலி பிரச்சாரத்தை வாட்ஸ் - அப் நிறுவனம் விரிவுபடுத்தி உள்ளது.

பசுக்களைக் கடத்திச் செல்வ தாகவும், குழந்தைகளைக் கடத்திச் செல்வதாகவும் உத்தரபிரதேசம், தமிழகம் உட்பட சில மாநிலங் களில் வாட்ஸ் - அப் உட்பட சமூக வலைதளங்களில் வதந்தி பரவி யது. இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் தாக்கியதில் சிலர் உயிரிழந் தனர். இதையடுத்து, வாட்ஸ் - அப்பில் போலி செய்திகள், வதந் திகள் பரவுவதைத் தடுக்க நட வடிக்கை எடுக்கும்படி அந்த நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்தது.

அதன்பின் வாட்ஸ் - அப் நிறுவனம் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் அடுத்தக்கட்டமாக அகில இந்திய வானொலி மூலம் பிரச்சார விளம்பரங்களை வெளியிட்டது. இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போலி செய்திகளைத் தடுக்க முதல் கட்டமாக பிஹார், ஜார் கண்ட், மத்தியபிரதேசம், சத்தீஸ் கர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உட்பட 7 மாநிலங்களில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி வானொலி மூலம் பிரச்சாரம் செய்தது. அதில், வாட்ஸ் அப்பில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன் மையை ஆராய்ந்துசெயல்படும் படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டது.

அதன் அடுத்தக்கட்டமாக அசாம், திரிபுரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய 10 மாநிலங் களில் வானொலி மூலம் பிரச்சார விளம்பரம் வெளியிட்டுள்ளோம். இந்த மாநிலங்களில் உள்ள 83 வானொலி நிலையங்கள் மூலம் இந்தப் பிரச்சாரம் நேற்று முதல் 15 நாட்களுக்கு ஒலிபரப்பப்படும். மேலும், அசாமீஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு, ஒரியா, தமிழ் ஆகிய 8 மொழிகளில் இந்த விளம்பரம் 15 நாட்களுக்கு ஒலிபரப்பப்படும்.

இவ்வாறுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்