‘தமிழ், பெரியார், காமராஜர்  வாழ்க’ - தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்

By செய்திப்பிரிவு

மக்களவையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்று வருகின்றனர். தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, கருணாநிதி வாழ்க எனக் கூறி சில எம்.பி.க்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அமோக வெற்றி பெற்றுமத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது.

முன்னதாக மக்களவை இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து  வைத்தார்.

இதன்பிறகு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.. வாரணாசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் வரிசையாக பதவியேற்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தி, ஆங்கிலம், போஜ்புரி, தெலுங்கு என பல மொழிகளிலும் பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் எம்.பி.க்கள் பதவி ஏற்கின்றனர். தமிழக எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்று வருகின்றனர். தொகுதி வரிசை வாரியாக இவர்கள் பதவி ஏற்கின்றனர்.

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் தமிழில் பதவி பிரமாணம் ஏற்றார். காந்தி, அம்பேத்கர், காமராஜர் வாழ்க என்று கூறி அவர் பதவியேற்றார். இதுபோலவே வட சென்னை திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி பதவியேற்றார். தொடர்ந்து தமிழக எம்.பி. தயாநிதி மாறன் பெரியார், கருணாநிதி வாழ்க எனக் கூறி பதவியேற்றார்.

தொடர்ந்து டி.ஆர், பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பதவியேற்றனர். விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் தமிழ் வெல்க எனக் கூறி பதவியேற்றார். தொடர்ந்து பல்வேறு தொகுதி எம்.பி.க்களும் தமிழில் பதவியேற்று வருகின்றனர்.

சிதம்பரம் தொகுதி எம்.பி. தொல்.திருமாவளவன் ‘அம்பேத்கர், பெரியார்’ வாழ்க, வாழ்க ஜனநாயகம்’ எனக் கூறி பதவியேற்றுக் கொண்டார்.  இதுபோலவே திமுக எம்.பி கனிமொழியும் தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்