நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராகிறார் ராகுல் காந்தி? - இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மக்களவைக்குழு தலைவர்கள் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறத் தவறிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்கள் பெற்ற நிலையில் அதைக்காட்டிலும் சிறிது அதிகமான இடங்களை இந்தமுறை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற முடியவில்லை.

இந்தத் தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மூத்த தலைவர்களை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், மூத்த தலைவர்கள் ராகுலின் ராஜினாமாவையும் ஏற்க மறுத்துவிட்டனர். இருப்பினும் தனது முடிவில் மாற்றமில்லை என அவர் உறுதியாக உள்ளார். இந்தநிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பின்பு நாடாளுமன்றம் ஜூன் 6-ம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கவும், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற செயல் திட்டத்தை வகுக்கவும் காங்கிரஸ் சார்பில் நேற்று நடத்த இருந்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. நாடுமுழுவதும் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பதற்கான வியூகங்கள்  வகுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேபோல், இந்தக் கூட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றகுழு தலைவராக தற்போது சோனியா காந்தி  பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கட்சியை வழி நடத்த விரும்புவதாக தெரிகிறது. அதனால் அவர் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுவின் தலைவராக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படகிறது.

கடந்த மக்களவையில் காங்கிரஸ் குழுவின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இருந்தார் ஆனால் இந்தமுறை அவர் தோல்வியடைந்து விட்டார். மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவரையும் காங்கிரஸ் எம்.பி.க்கள் தேர்வு செய்ய வேண்டும்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்