இன்று சியாச்சின் செல்கிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்

By பிடிஐ

பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராஜ்நாத் சிங், முதல் பயணமாக இன்று சியாச்சின் பனிமலைப் பகுதிக்குச் சென்று ராணுவ அதிகாரிகளுடன் உரையாடுகிறார்.

பிரதமர் மோடி தலைமையி லான 2-வது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பாதுகாப்பு அமைச்சராக ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், முதல் பயணமாக இன்று சியாச்சின் பனிமலைப் பகுதிக்குச் செல்கிறார். கடல் மட்டத்திலிருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின், உலகின் மிகவும் அபாயகரமான போர் பகுதியாக கருதப்படுகிறது. ராணுவ தளபதி பிபின் ராவத்துடன் செல்லும் ராஜ்நாத் சிங், சியாச்சினில் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ தளபதிகள் மற்றும் வீர்ர்களை சந்தித்து உரையாட உள்ளார்.

இதுதவிர, லே பகுதியில் உள்ள ராணுவத்தின் 14-வது படைப் பிரிவு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள 15-வது படைப்பிரிவுகளின் தலைமையகத்துக்கும் ராஜ்நாத் சிங் செல்ல உள்ளார். இந்தத் தகவலை பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நிலவும் பாதுகாப்பு நிலவரம் மற்றும் காஷ்மீரில் மேற் கொள்ளப்பட்டு வரும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் அமைச்சரிடம் விரிவாக எடுத் துரைக்க உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

33 mins ago

க்ரைம்

37 mins ago

இந்தியா

35 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்