சந்திரசேகர ராவின் வியூகத்தை தகர்த்த சாதுர்யம்: கிஷண் ரெட்டிக்கு மத்திய அமைச்சர் பதவி

By செய்திப்பிரிவு

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் வியூகங்களை தகர்த்து, பாஜகவுக்கு 4 இடங்களில் வெற்றியை தேடி தந்த அம்மாநில மூத்த தலைவர் கிஷண் ரெட்டி மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளார். 

மத்தியில் பாஜகவோ அல்லது காங்கிரஸோ தனிப்பெரும்பான்மை பெறாது என யூகித்திருந்த தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், மாநிலத்தில் குறைந்தபட்சம் 16 தொகுதிகளில் டிஆர்எஸ் வெற்றி பெறும் என நம்பினார். இதனால் தேர்தல் முடிவுகள் வெளி வரும் முன்பே பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால், மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் 9 தொகுதிகளை மட்டுமே தெலங்கானா ராஷ்டிர சமிதி கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான அகில இந்திய மஜ்லீஸ் கட்சி 1 தொகுதியில் வென்றது. பாஜக 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பாஜகவின் வெற்றியை சந்திரசேகர ராவ் எதிர்பார்க்கவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் பாஜகவுக்கு எதிரான வியூகத்தை வகுத்தார். மாநிலத்தில் பாஜகவை தனிமைப்படுத்தி எதிர்ப்பு கட்சிகளை ஓரணியில் திரட்டினார்.

இதனால் டிசம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெறும் 6 சதவீத வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தது. ஆனால் மக்களவைத் தேர்தலில் ஏறக்குறைய 20 சதவீத வாக்குகளை பெற்று 4 இடங்களில் வென்ற 2வது பெரிய கட்சியாக உருவெடுத்து விட்டது.

இதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் கிஷண் ரெட்டி மேற்கொண்ட எதிர் வியூகங்கள் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக விவசாயிகள் பிரச்சினையை முன் வைத்து அவர் நடத்திய போராட்டம் பெரும் வெற்றியை கொடுத்தது.

சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மக்களவைத் தேர்தலில் தோற்கவும் விவசாயிகள் எதிர்த்து களம் கண்டதே காரணம். விவசாயிகள் பிரச்சினை சந்திரசேகர ராவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதனை தேர்தலில் பயன்படுத்தி வெற்றியை அறுவை செய்துள்ளார் கிஷண் ரெட்டி.

இதையடுத்து கிஷண் ரெட்டி மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் வென்ற அவர் உடனடியாக அமைச்சராகவும் ஆக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த கிஷண் ரெட்டி பாஜக மாநில தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இளைஞரணி தலைவராக இருந்து கட்சியை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்