ஆந்திராவில் சூடுபிடிக்கும் தேர்தல் கால தொழில்கள்

By செய்திப்பிரிவு

தேர்தல் காலம் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பரபரப்பானது.

ஆனால், போஸ்டர்கள், பேனர்கள், கொடிகள் அச்சுப்பணி ஆர்டர் குவியும் என்பதால் அச்சக தொழில் உள்ளிட்ட சில தொழிலாளிகளுக்கு பரவசமானது.

அந்த வகையில் ஆந்திராவில் அச்சக தொழில் தேர்தல் காலத்தால் சூடுபிடித்திருக்கிறது. வாக்காளர்களைக் கவரும் வகையில் விளம்பர பேனர்கள், நோட்டீஸ்கள் அச்சடிக்க, கட்சியை விளம்பரப்படுத்த விதவிதமான சிறு பொருட்களை உருவாக்க அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அரசியல் கட்சியினருக்கு ஆந்திர தலைநகரில் உள்ள அருண்டல்பேட் அச்சகங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.

பக்கத்துக்கு மாநில அரசியல் கட்சிகள் கூட இங்கு தங்களுக்கான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

தேர்தலை கணக்கில் கொண்டு ஹைதராபாத்தைச் சேர்ந்த அச்சக நிறுவனம் ஒன்று விஜயவாடா, விசாகப்பட்டினம், திருப்பதி என மூன்று ஊர்களில் புதிதாக கிளைகள் அமைத்துள்ளது.

இங்கு, பேனர்கள், கொடிகள் தவிர கட்சி சார்ந்த சேலைகள், கீ செயின்கள், கைவிசிறிகள், டி ஷர்ட்டுகள், சால்வைகள் ஆகியன இந்த தொழிற்கூடங்களில் தயாரிக்கப்படுகின்றன.

தேர்தல்தான் அறிவிக்கப்பட்டுள்ளது பெரிய கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியல் மட்டும் வெளியாகிவிட்டால் எங்களுக்கு ஆர்டர்கள் குவியும் என நீலிமா கிராபிக்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். தேர்தல் பிரச்சாரத்துக்காக 5 ரூபாயில் தொடங்கி பொருட்கள் கிடைக்கின்றன.

கல்யாண சீசனுக்கு அடுத்தபடியாக எங்களுக்கு பெரிய வருமானம் தருவது தேர்தல் சீசன் தான் எனவும் அவர்கள் கூறுகின்றனர். அரசியல் கட்சிகளுடன் நேரடி தொடர்பு இருந்தால் இத்தொழிலை இன்னும் சிறப்பாக செய்ய முடியும் எனக் கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்