’மசூத் அசார்ஜி’ என அழைத்ததாக ராகுல் காந்தி மீது தேசதுரோக வழக்கு: அசாம் போலீஸார் எப்ஐஆர் பதிவு

By பிடிஐ

அசாம் மாநிலம், மோரிகான் மாவட்ட போலீஸார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யதுள்ளனர்.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, மரியாதையாக 'மசூத் அசார்ஜி' என்று அழைத்ததால், ராகுல் காந்தி மீது இந்த வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்டிஐ ஆர்வலர் ராஜு மகாந்தா என்பவர் இந்த மோரிகான் போலீஸில் அளித்ததன் பெயரில்  ராகுல் காந்தி மீது தேசத் துரோக வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

ராஜு மகாந்தா அளித்த புகாரில், " புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, 'மசூத் அசார்ஜி என்று ராகுல் காந்தி மரியாதையுடன் அழைத்தது, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு. ஆதலால், அவர் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்ய வேண்டும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரையடுத்து, மோரிகான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதிப் நாத், முதல் தகவல் அறிக்கையை ராகுல் காந்தி மீது பதிவு செய்துள்ளார். விரைவில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பிஹாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் முசாபர்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை மரியாதையாக மசூத் அசார்ஜி என்றுராகுல் காந்தி அழைத்தது மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டது" என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

கருத்துப் பேழை

34 mins ago

விளையாட்டு

38 mins ago

இந்தியா

42 mins ago

உலகம்

49 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்