ஆற்றுக்கால் பகவதி கோயில்: லட்சக்கணக்கான பெண்கள்  பொங்கல் வைத்து வழிபாடு

By செய்திப்பிரிவு

கேரள மாநிலம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் இன்று பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

திருவனந்தபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மாசி பொங்கல் விழா இன்று நடைபெற்றது. காலை 10:15 மணிக்கு பெரிய பண்டார அடுப்பில் கோயில் தந்திரி தீ வைத்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து கோயிலை சுற்றி  லட்சக்கணக்கான பெண்கள் செங்கல் அடுப்பில் மண்பானையில் பொங்கலிட்டனர்.

திருவனந்தபுரம் நகரின் முக்கிய வீதிகளிலும், லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபட்டனர். பொங்கல் திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

பொங்கல் விழாவில் வெளிநாட்டு பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் அதிக பெண்கள் திரண்டு பொங்கல் வழிபாடு நடத்தியது 2 முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

12 hours ago

மேலும்