உயர் பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்ட பாகிஸ்தானி கைதிகள்

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் உள்ள  பாகிஸ்தானி கைதிகள் உயர் பாதுகாப்பு கொண்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மத்திய சிறையில், 50 வயது பாகிஸ்தானி கைதி கொல்லப்பட்டதை அடுத்து, மேற்கு வங்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

இதுகுறித்து வெளியான தகவலின்படி, ''ராஜஸ்தான் சிறை சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தானி கைதிகளைத் தனியாகப் பிரித்துத் தங்கவைக்கக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க மையத் தாக்குதலில் கைதானவர்கள் மற்றும் மாவோயிஸ்டுகள் தங்கியிருக்கும் உயர் பாதுகாப்பு சிறைகளுக்கு பாகிஸ்தானி கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

 

அவர்கள் 14 பேருக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சக கைதிகளுடன் சுமுகமாகப் பழகியவர்கள். எனினும் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை.

 

பாதுகாப்புக் காரணங்களுக்காக 10 பேர் டும் டும் மத்திய சீர்திருத்தப் பள்ளியிலும் 4 பேர் மாநில சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

முன்னதாக விசா நடைமுறைகளை மீறியதற்காகவும் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாகிஸ்தானியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

18 mins ago

சுற்றுலா

30 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

37 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்