வெள்ளத்தால் 100 கோடி மக்கள் பாதிப்பு; ரூ. 85 ஆயிரம் கோடிக்கு இழப்பு; தமிழகத்தில் 2015-ல் அதிகம்: மத்தியஅரசு தகவல் 

By பிடிஐ

கடந்த 2015-17-ம் ஆண்டு முதல் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் 100 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ரூ.85 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்தியஅரசு தகவல் தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதில் அளித்தார். அவர் கூறுகையில், “ இந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் 4,902 பேர் உயிரிழந்துள்ளனார், 82 ஆயிரத்து 146 கால்நடைகள் பலியாகியுள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரத்து 420 பேர் பலியாகியுள்ளனர், இதில் தமிழகத்தில் அதிகபட்சமாக 421 பேர் பலியாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக ரூ.57 ஆயிரத்து 291.11 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரத்து 912.51 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ரூ.25 ஆயிரத்து 353.27 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.5ஆயிரத்து 675 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது, 1,420 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 62 பேர் மழை வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். ரூ.22 ஆயிரத்து 706.98 கோடிக்கு  இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கமாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.43 ஆயிரத்து 081 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது ” எனத் தெரிவித்தார்.

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

6 mins ago

சினிமா

17 mins ago

சினிமா

20 mins ago

வலைஞர் பக்கம்

24 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

34 mins ago

இந்தியா

42 mins ago

க்ரைம்

39 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்