காங்கிரஸ் கட்சிக்கு எப்பவுமே பாதுகாப்புத் துறை என்பது ‘பணம் பார்க்கும்’ விஷயமாகவே இருந்துள்ளது: பிரதமர் மோடி கடும் பாய்ச்சல்

By பிடிஐ

தமிழக பாஜகவினருடனான இன்றைய வீடியோ கான்பரன்சிங்கில் பேசிய பிரதமர் மோடி, தேசப்பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்புத் துறை என்பது எப்போதும் காங்கிரஸுக்கு விமர்சனம் செய்யப்பட வேண்டிய துறை அல்லது, பணம் பண்ணும் துறை என்பதாகவே இருந்து வந்துள்ளது என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

 

காங்கிரஸ் தலைவர்கள் துல்லியத் தாக்குதலை கேலி செய்கின்றனர், இன்னொரு புறம் பாதுகாப்புத் துறை என்பது அவர்களுக்கு கொள்ளை அடிக்கும் ஒரு துறையாகவே அமைந்து வந்துள்ளது, 1940-களின் 50களின் ஜீப் ஊழலாகட்டும், அல்லது 80களின் போபர்ஸ் ஊழலாகட்டும், அல்லது அகஸ்டாவெஸ்ட்லேண்ட் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல்களாகட்டும் பாதுகாப்புத் துறை என்பது அவர்களுக்கு பணம் பார்க்கும் ஒரு துறையாகவே இருந்து வந்துள்ளது.

 

“நம் படையினரின் உணர்வு, வீரம், உத்வேகம் ஆகியவை குறைந்தாலும் பரவாயில்லை எப்படிப் பணம் பண்ணுவது என்பதுதான் அவர்கள் பார்வையாகவே இருந்துள்ளது” என்று சாடினார்.

 

சமீபத்தில் ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, எல்லைத் தாண்டிய துல்லியத் தாக்குதலை ராகுல் காந்தி சந்தேகிக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் வைத்தார்.  ராணுவ நடவடிக்கை எதிர்க்கட்சிகளை உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக  அதிருப்தி அளிக்கிறது என்று காங்கிரஸாரை சாடினார்.

 

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை தங்கள் சொத்தாக பாஜக பார்க்கிறது என்று ராகுல் காந்தி சாடியதைத் தொடர்ந்து மோடி காங்கிரஸை பதில் தாக்குதல் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்