மத்திய பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் தர மறுப்பு: பேருந்தில் குழந்தையை பெற்ற அவலம்

By செய்திப்பிரிவு

மத்திய பிரதேசத்தில் கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் வழங்க அரசு மருத் துவமனை நிர்வாகம் மறுத்ததால், அந்தப் பெண் பேருந்திலேயே குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய அவலம் நேர்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த வர் உத்தம் சிங். கூலித் தொழிலாளியான இவரது மனைவிக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அரசு சமுதாய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்த போதிலும் வலி குறையாததால், அங் கிருந்த மருத்துவர்கள் அப் பெண்ணை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், ஆம்புலன்ஸ் வழங்க வேண்டுமானால் குறிப்பிட்ட தொகையை தருமாறும் அங்கிருந்தவர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால், உத்தம் சிங்கிடம் பணம் இல்லாததால், அவர் களுக்கு ஆம்புலன்ஸ் வழங்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, வலியால் துடித்துக் கொண்டிருந்த தனது மனைவியை அங்கு வந்த அரசு பேருந்தில் ஏற்றிக் கொண்டு உத்தம் சிங் சென்றுள்ளார்.

இந்நிலையில், சிறிது நேரத் திலேயே, சுகாதார வசதி ஏதுமற்ற அந்தப் பேருந்தில் அவரது மனைவி குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது. - ஏஎன்ஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்