நாட்டில் 21 அணு உலைகள் அமைக்கும் பணி தீவிரம்: மத்திய அமைச்சர் தகவல்

By பிடிஐ

நாடு முழுவதும் 21 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருவதாக மத்திய பிரதமர் அலுவலக துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்த பதில்:

15,700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் நாடு முழுவதும் 21 அணு உலைகளை மத்திய அரசு அமைத்து வருகிறது. இதில் 9 அணு உலைத் திட்டங்கள் 2024-25-ம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 12 அணு உலைத் திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் தொடங்கப்படும்போது நமக்கு மொத்தம் 15,700 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இந்தத் திட்டங்கள் 2031-ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஜெய்தாப்பூர், ஆந்திராவில் கொவ்வடா, குஜராத்தில் சாயா மிதி விர்டி, மேற்கு வங்கத்தில் ஹரிப்பூர், மத்தியபிரதேசத்தில் பீம்பூர் ஆகிய இடங்களில் அணு உலைகளை அமைக்க கொள்கை ரீதியான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இலகுவான நீர் மின் அணுஉலைகளை வெளிநாட்டு ஒத்துழைப்புடன் அமைக்கவும் அரசு முடிவெடுத்

துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 mins ago

ஜோதிடம்

16 mins ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்