தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியன் விலகல்

By பிடிஐ

 

நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா ராஜினாமா செய்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

சொந்த அலுவல்கள்காரணமாக, பதவியை ராஜினமா செய்துவிட்டு அமெரிக்கா செல்ல அரவிந்த் சுப்பிரமணியன் விருப்பம் தெரிவித்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியம் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டே இவரின் பதவி முடிந்த நிலையிலும் அவருக்கு ஒரு ஆண்டு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டது. வரும் அக்டோபர் மாதத்துடன் பதவிக்காலம் முடியும் நிலையில் எப்போது அரவிந்த் சுப்பிரமணியன் விலகுவார் எனக் குறிப்பிடவில்லை.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் என்னுடன் வீடியோ கான்பிரன்ஸிங்கில் பேசினார். அப்போது, தனக்குச் சொந்த அலுவல்கள் இருப்பதால், தொடர்ந்து பொருளாதார ஆலோசகர் பதவியில் நீடிக்க முடியாது, தான் அமெரிக்க செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது எனத் தெரிவித்தார். அவரின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன்.

சுப்பிரமணியனின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிந்தபோதிலும் அவரை மேலும் ஒரு ஆண்டு பதவியில் நீடிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டதற்கனங்க அவர் நீடித்தார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசகனைகள் வழங்கியமைக்கும், அரசின் பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக வகுத்தமைக்கும் அரவிந்த் சுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் அரவிந்த் சுப்பிரமணியனின் துடிப்பு, ஆர்வத்துடன் செயலாற்றும் தன்மை, புத்திசாலித்தனம், திறமை, ஆலோசனைகள் அளிப்பது போன்றவை இனிமேல் நான் இழக்க வேண்டியது இருக்கும். நாள்ஒன்றுக்கு பலமுறை என் அறைக்கு வந்து பல்வேறு விஷயங்கள் குறித்து அமைச்சர் என்ற ரீதியில் அரவிந்த் சுப்பிரமணியன் பேசியுள்ளார். அவர் பணியைவிட்டு புறப்பட்டுச் செல்லும் முன் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரின் எண்ணம் அனைத்தும் இந்தியா மீதே இருக்கும் என்பதை அறிவேன். அவர் எங்கிருந்தாலும் தொடர்ந்து தேவைப்படும்போது ஆலோசனைகளை அளிப்பார் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியன் சேரும் முன் அமெரி்க்காவின் உலகப் பொருளாதார மேம்பாட்டு மையத்தில், சீனியர் பெல்லோவாகவும், பீட்டர்ஸன் சர்வதேச பொருளாதார மையத்தில் டென்னிஸ் வெதர்ஸ்டோன் சீனியர் பெல்லாவாகவும் அரவிந்த் சுப்பிரமணியன் பணியாற்றி வந்தார்.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு நன்றி தெரிவித்து, அரவிந்த் சுப்பிரமணியன் விடுத்த செய்தியில், அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து பெருந்தன்மையான, பணிவான வார்த்தைகளைக் கேட்டதில் மகிழ்கிறேன். தனிப்பட்ட காரணங்கள், கல்லி, ஆய்வுப்பணிக்காக நான் மீண்டும் அமெரிக்கா செல்கிறேன். தலைமை பொருளாதார ஆலோசகர் என்பது எனக்குக் கிடைத்த கவுரவம். நான் வகித்தபதவிகளில் சிறப்பானது. இதை அளித்த அரசுக்கு மிக்க நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

2015-16-ம் ஆண்டு பட்ஜெட்டின் போது, மக்கள் திட்டங்களுக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்பதை அரசுக்கு வலியுறுத்தியவர் அரவிந்த் சுப்பிரமணியன்.

மேலும், ஜன் தன், ஆதார், மொபைல் போன்றவற்றை ஆதாரோடு இணைப்பதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மையையும் அரசுக்குக் கூறியவர் அரவிந்த் சுப்பிரமணியன். மேலும், சீருடை, உரங்கள், மண்எண்ணெய், எரிசக்தி, பருப்புவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் அரசு கொள்கை முடிவுகள் எடுக்க முக்கிய ஆலோசனைகள் அளித்தவர், ஜிஎஸ்டி கொண்டுவருவதில் பல்வேறு ஆலோசனைகள் அளித்து, பொருளாதார ஆய்வறிக்கை தயார் செய்தல் போன்றவற்றை அரவிந்த் சிறப்பாகச் செய்துள்ளார்.

வசதியானவர்களுக்கு மானியத்தை ரத்துசெய்யலாம் என்ற திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்தவர் அரவிந்த் சுப்பிரமணியன் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

12 mins ago

விளையாட்டு

7 mins ago

கல்வி

27 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

50 mins ago

வாழ்வியல்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்