கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

By பிடிஐ

28 வயது இளைஞர் ஒருவர் இறந்ததை அடுத்து நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்கள்  எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகில், காரசேரியைச் சேர்ந்தவர், இவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 29 அன்று அனுமதிக்கப்பட்டார். நிபா வைரஸ் தாக்குதலில் கடுமையான நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இருவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின்போது நிபா வைரஸ் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்த 1,353 பேருக்கு நோய் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்று வந்த நெல்லிக்கோடைச் சேர்ந்த மதுசூதனன் 55, நேற்று இரவு தனது இறுதி மூச்சை நிறுத்தினார். அவர் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக பணியாற்ற வந்தவர்.

விலங்குகள் மற்றும் மனிதர்களில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் நிபா வைரஸ், பெரம்பிராவில் உள்ள பயன்படுத்தப்படாத கிணற்றில் இருந்த பழந்தின்னி வவ்வால்களிடமிருந்து பரவுவதாக என சந்தேகிக்கப்படுகிறது.

டெரோபஸ் பேரினத்தின் டெர்போடிடேட் குடும்ப வகையைச் சேர்ந்த பழந்தின்னி வவ்வால்களில் இருந்துதான் இந்த கொலைகார வைரஸ் விருந்தாளிகள் படையெடுத்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்