ஹரியானாவில் போலீஸ் ‘கான்ஸ்டபிள்களாக’ வழக்கறிஞர்கள், எம்டெக், எம்பிஏ படித்த இளைஞர்கள்

By செய்திப்பிரிவு

ஹரியானா மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பயிற்சி முடித்துச் செல்பவர்களில் வழக்கறிஞர்கள், எம்டெஸ், எம்பிஏ, எம்பில் படித்தவர்கள் உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹரிபாயனா போலீஸ் டிஜிபி பி.எஸ்.சாந்து வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஹரியானாவில் பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் 4 ஆயிரத்து 225 போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான விண்ணப்பம் கோரப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் பயிற்சி முடிந்து வரும் 20-ம் தேதி பல்வேறு இடங்களில் பணி அமர்த்தப்படுகின்றனர். மதுபான் நகரில் நடக்கும் இதற்கான விழாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் பங்கேற்கிறார்.

இந்த முறை போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு 3 ஆயிரத்து827 பேர் கிராமப்புறங்களில் இருந்தும், 398 பேர் நகர்ப்புறங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் எம்.பில் பட்டதாரிகள், எம்,டெக்படித்தவர்கள் 15 பேர், எம்சிஏ படித்த இளைஞர்கள் 16 பேர், எம்பிஏ படித்த இளைஞர்கள் 36 பேர், எம்.காம் முடித்தவர்கள் 38 பேர், 103 பேர் எம்.ஏ முடித்தவர்கள், 273 பேர் பிடெக் முடித்தவர்கள், பிசிஏ படித்தவர்கள் 51 பேர், எல்எல்பி முடித்தவர்கள் 3 பேர், பிஎஸ்சி படித்தவர்கள் 434 பேர், பிகாம் முடித்தவர்கள் 215 பேர், பிஏ முடித்தவர்கள் 844 பேர், 23 பேர் டிப்ளமோ படித்தவர்கள், 65 பேர் 12-ம்வகுப்பு முடித்து, ஐடிடி, பாலிடெக்னிக் முடித்துள்ளனர். 2028 பேர், 12-ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ளனர்

போலீஸ் பிரிவில் போலீஸ் நிர்வாகம், ரேடியோ டெடிகாம், போக்குவரத்து பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு, கிரிமினல் பிரிவு, மனித செயல்பாடு, கணினிப்பயிற்சி, உளவியல் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த 3 ஆயிரம் பேர் பணியிடங்களி்ல அமர்த்தப்பட்டபின் போலீஸ் துறை கூடுதல் பலம் பெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்