கர்நாடகாவில் நடத்தை விதிகளை பாஜக மீறுவதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்

By செய்திப்பிரிவு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் நடத்தை விதிகளை மீறி பாஜக விளம்பரம் செய்து வருவதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித் துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ராஜீவ் சுக்லா, பிரமோத் திவாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மத ரீதியாக பிரச்சாரம் செய்து வருகிறது. இதுதொடர்பாக அந்த கட்சி வெளியிட்ட விளம்பரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

ஆரம்பம் முதலே தேர்தல் நடத்தை விதிகளை மீறி பாஜகவின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்க உள்ளோம்.தோல்வி பயத்தில் உள்ள பாஜக மக்களை திசை திருப்பும் வகையிலும் ஆட்சேபகரமான விளம்பரங்களை தயாரித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்