பாஜக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திடீர் கைகோர்ப்பு: பஞ்சாயத்து தேர்தலில் மம்தாவை வீழ்த்த வியூகம்

By செய்திப்பிரிவு

கொள்கையளவில் கடும் எதிரிகளான பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்குவங்க மாநில உள்ளாட்சி தேர்தலில், து எதிரியான மம்தா பானர்ஜியை வீழ்த்துவதற்காக கைகோர்த்துள்ளனர்.

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் பல்வேறு மோசடிகளை செய்து வருவதாக புகார் எழுந்தது. எதிர்கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியாத நிலை இருப்பதாக கூறி பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தேர்தல் தேதியை மாற்ற கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த.

ஆளும் கட்சியினர் கடும் வன்முறையில் ஈடுபட்டதால் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் மையத்திற்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சமூகவலைதளமான ‘வாட்ஸ் -ஆப்’ மூலம் வேட்புமனுக்களை எதிர்கட்சி வேட்பாளர்கள் அனுப்பி வைத்தனர். மே 14-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆளும் கட்சியினரின் உத்தரவுபடி அதிகாரிகள் செயல்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேசமயம் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸூடன் சில இடங்களில் தொகுதிகளை பகிர்ந்து கொண்டு போட்டியிடுகின்றனர்.

அரசியல் எதிரிகள்

இந்நிலையில் பொது எதிரியான திரிணமுல் காங்கிரஸை வீழ்த்துவதற்காக முதன்முறையாக அரசியல் எதிரிகளான பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பஞ்சாயத்து தேர்தலில் கைகோர்த்துள்ளன.

பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் கட்சி வன்முறையை கண்டித்து கடந்த வாரம் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தங்கள் கட்சி கொடிகளுடன் கலந்து கொண்டனர். இருகட்சி தொண்டர்களும் ஒரே பேரணியில் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆளும் கட்சியின் வன்முறைக்கு எதிரான பேரணி என்பதால் இருதரப்பும் கைகோர்த்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த பேரணியில் பாஜக ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் கூறியிருந்தார். வன்முறையால் மார்க்சிஸ்ட் கட்சியினரும் பாதிக்கப்பட்டுள்ளாதல் அவர்களும் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டனர் என அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, கிராமப்புற உள்ளாட்சிகளில் பல இடங்களில் பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கைகோர்த்துள்ளன. பரஸ்புர புரிதலுடன் தொகுதிகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். நாடியா உள்ளிட்ட மாவட்டங்களில் இருகட்சிகளையும் சேர்ந்தவர்கள் உள்ளூர் அளவில் தங்களுக்கும் இடங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

திரிணமுல் காங்கிரஸ்

இருகட்சிகளின் கொள்கை வேறாக இருந்தாலும், திரிணமுல் காங்கிரஸூக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்துடன், இருகட்சிகளும் ‘தொகுதி பகிர்வு’ செய்து கொண்டதாக நாடியா மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சுமித் டியோ கூறியுள்ளார். இது உள்ளூர் அளவில் நடப்பதாகவும், அந்த பகுதி சூழ்நிலையை கருத்தில் கொண்டு இருகட்சிகளும் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும், நாடியா மாவட்ட பாஜக தலைவரும் கூறியுள்ளார்.

இதன்படி சில தொகுதிகளில் பாஜகவினர் தங்கள் தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. வேறு சில இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்த இடங்களில் பாஜகவினர் சில தொகுதிகளை விட்டுக்கொடுத்து வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதுபோலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஆளும் கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கிராம பஞ்சாயத்துகளில் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதில்லை. சுயேட்சை சின்னத்திலேயே அனைவரும் போட்டியிட வேண்டும். எனவே கூட்டணி என்ற பிரச்சினை எழவில்லை. கட்சியின் ஆதரவுடன் போட்டி என்பதால் கூட்டணி குறித்த பிரச்சினை இல்லை என இருதரப்பினரும் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் சுஜான் சக்கரவர்த்தி கூறுகையில் ‘‘உள்ளூர் அளவில் நடக்கும் இதுபோன்ற கைகோர்ப்பு சம்பவங்களை வைத்துக் கொண்டு இருகட்சிகளுக்கும் இடையே கூட்டணி இருப்பதாக கூற முடியாது. வேறு சில கட்சிகளுக்கும் இடையேயும் இதுபோன்ற உள்ளூர் அளவில் புரிதல் நடந்துள்ளன. பாஜகவின் மதவாத அரசியலை கடுமையாக எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள் மட்டும்தான். எனவே அந்த கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’’ எனக்க கூறினார்.

 

இதையும் மிஸ் பண்ணாதீங்க...

‘பிரேக் பிரச்சினை எதிரொலி’ - 52,000 கார்களை திரும்பப் பெறுகிறது மாருதி

தூசுப் புயல் மீண்டும் கோர தாண்டவம்: இருளில் மூழ்கியது டெல்லி - பள்ளிகளுக்கு விடுமுறை

‘‘மக்களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் ஆவேன்’’ - ராகுல் காந்தி

காவிரி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இன்றும் தாக்கல் செய்யவில்லை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்