ராணுவத்துக்கு உதவ பல செயற்கைகோள்கள் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

By செய்திப்பிரிவு

ராணுவத்துக்கு உதவுவதற்காக பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) விண்ணில் ஏவத் திட்ட மிட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறும்போது, “நமது நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கவும், நமது நிலப்பகுதிகளைப் பாதுகாக்கவும், கடல் எல்லைகளைக் கண்காணிக்கவும் பல்வேறு செயற் கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்த வுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய விமானப்படைக்காக ஜிசாட்-7ஏ, ஆண்டு இறுதிக்குள் தொலை உணர் செயற்கைக்கோளான ரிசாட்-2ஏ விண்ணில் செலுத்தப்படும். இதில் ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் முழுக்க முழுக்க இந்திய விமானப் படை வசதிக்காக செயல்படும்.

ரிசாட்-2ஏ செயற்கைக்கோளில் அதிநவீன சிந்தெடிக் வகை ரேடார் இடம்பெறும். இதன்மூலம் கண்காணிப்பு செய்வதோடு, நாட்டின் எந்தப் பகுதியிலும் தட்பவெப்பநிலையையும் இது துல்லியமாக அறிவிக்கும். தொடக்கத்தில் நில அளவை வரைபட பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் கடலின் மேற்பகுதியையும் இது ஆராய்ச்சி செய்யும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்