தெலங்கானாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது: 1 கோடி குடும்பத்தினரிடம் தகவல்கள் சேகரிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 1 கோடி குடும்பத்தினரிடம் உயர் நீதிமன்ற அனுமதியுடன் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. இந்த பணியில் 3.76 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கமாக பரபரப்பாக இயங்கும் ஹைதராபாத் சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. காரணம் கணக்கெடுப்புக்கு வசதியாக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து பிரிந்து, நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா உதயமானது. கடந்த 3 மாத காலத்தில் அரசு ஊழியர் பிரச்சினை, மாணவர்களின் கல்வி உதவித் தொகை, மின்சாரம், சட்டம்-ஒழுங்கு உரிமையை ஆளுநருக்கு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இம்மாநிலம் எதிர்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநில முதல் வர்களும் ஆளுநர் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினர். இரு மாநிலங்களுக்கிடையிலான பொது பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்வது குறித்து இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், தெலங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட வர்களின் விவரங்களை அறிவதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதென மாநில அரசு முடிவு செய்தது. இந்த முடிவுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக தெலங்கானாவில் வசிக்கும் ஆந்திர மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மறுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும் இந்த கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி உயர் நீதிமன் றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட் டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மக்களுக்கு இடையூறு இல்லாமலும், அவர்களை வற்புறுத்தாமலும் கணக்கெடுப்பு நடத்த திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.

இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தெலங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்தப் பணியில் 3.76 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

முன்னதாக, தெலங்கானா மக்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என மாநில அரசு அறி வித்திருந்தது. இதையடுத்து, வேலை நிமித்தமாக ஹைதராபாத், செகந்திராபாத் ஆகிய இடங்க ளில் தங்கியிருந்தவர்கள் திங்கள் கிழமை குடும்பம், குடும்பமாக தங் களது சொந்த ஊர்களுக்கு புறப் பட்டுச் சென்றனர். இதனால், ரயில், பஸ்களில் கூட்டம் அலை மோதியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

வாழ்வியல்

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்