மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி பெட்ரோலிய பொருட்களை மிச்சப்படுப்படுத்த வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நொய்டாவில் 12. 5 கிலோ மீட்டர் மெஜந்தா லைன் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

‘‘வரும் 2022ம் ஆண்டு இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இந்தியா தனது பெட்ரோலிய தேவையை குறைத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். பல்முனை பொது போக்குவரத்தின் மூலம் பெட்ரோலியப் பொருட்களின் தேவையை கணிசமாக குறைக்க முடியும்.

இதன் மூலம் சாதாரண மக்கள் பணத்தை மிச்சப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் வெகுவாக குறைக்க முடியும். மக்களுக்கு போக்குவரத்து மிகவும் இன்றியமையாதது. தற்போது அதன் தேவையும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழலில் மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு அதிக பயனுடையதாக இருக்கும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93வது பிறந்த தினம் தற்போது கொண்டாடப்படுகிறது. 2002ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவையை அவர், தொடங்கி வைத்து பயணம் செய்ததை எண்ணிப் பார்க்கிறேன். அதன் பின் மெட்ரோ ரயில் சேவை பல மடங்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது’’ எனக்கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

56 secs ago

விளையாட்டு

23 mins ago

வேலை வாய்ப்பு

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்