பாஜகவுக்கு மட்டும் ஒரு சினிமா கம்பெனி இருந்திருந்தால் அதற்கு லை ஹார்டு என்றே பெயரிருந்திருக்கும்: ராகுல் கிண்டல்

By செய்திப்பிரிவு

பாஜகவுக்கு மட்டுமெ ஒரு சினிமா கம்பெனி இருந்திருந்தால் அதற்கு  ''லை ஹார்டு' என்றே பெயரிருந்திருக்கும் என ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

டை ஹார்டு என்பது பிரபல ஹாலிவுட் சினிமா. அந்தப் பெயரை சார்ந்து லை ஹார்டு என ராகுல் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவரது தலைமையில் முதல்முறையாக அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "குஜராத் மாதிரி வளர்ச்சி என்பதே பொய்யானது. குஜராத் மக்களிடம் நான் பேசும்போது வளர்ச்சியே இல்லை என்று தெரிவித்தனர். பாஜகவின் அடித்தளமே பொய்யானது. பாஜக தலைவர் அமித் ஷா மகனின் நிதி முறைகேடுகள் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உண்மை வெளியே வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை பாஜக திரித்துக் கூறியது" என்றார்.

இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜகவுக்கு மட்டுமெ ஒரு சினிமா கம்பெனி இருந்திருந்தால் அதற்கு  ''லை ஹார்டு' என்றே பெயரிருந்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். #BJPLieHard #BJPLies #HowManyBJPLies என்ற ஹேஷ்டேகுகள் கீழ் அவர் இக்கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதனை பலரும் ரீட்வீட் செய்துவருகின்றனர். ராகுலை ஆதரித்தும், பாஜகவை எதிர்த்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

விளையாட்டு

38 mins ago

க்ரைம்

42 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்