அமுல் நிறுவனத்தின் கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றது இந்திய ரயில்வே

By பிடிஐ

குளிரூட்டப்பட்ட பால் பொருட்கள் கொண்ட பார்சல்களை ரயில் மூலம் அனுப்புவது குறித்த அமுல் நிறுவனத்தின் கோரிக்கையை இந்திய ரயில்வே மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளது.

பால் பொருட்களின் முதன்மை விற்பனையாளரான அமுல் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அதில் அமுல் வெண்ணெயை இந்தியா முழுவதும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு ரயில்வேயில் உள்ள குளிரூட்டப்பட்ட பார்சல் வேன் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ரயில்வே நிர்வாகம் பதில் பதிவில், ''இந்தியாவின் சுவையை ஒவ்வொரு இந்தியருக்கும் கொண்டு சேர்ப்பதில் எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சியே'' என்று தெரிவித்துள்ளது.

இதுவரை ரயில் பயணிகளின் இன்னல்களைத் தீர்க்க மட்டுமே உதவிவந்த ரயில்வே ட்விட்டர் பக்கத்தில் தொழில் யோசனைகளை நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறை.

'முறையாக செயல்படாத சேவை'

விரைவில் கெட்டுப்போகும் பழங்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சாக்லேட்டுகள் ஆகியவற்றை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ரயில்வேயில் குளிரூட்டப்பட்ட பார்சல் சேவை சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அவை முறையாகச் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

சினிமா

32 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

39 mins ago

சுற்றுலா

51 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

58 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

19 mins ago

மேலும்