உ.பி. மாணவர் சங்க தேர்தலில் சமாஜ்வாதி வெற்றி

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில், பாஜக ஆதரவு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை பின்னுக்குத் தள்ளி சமாஜ்வாதி கட்சியின் மாணவர் பிரிவு அமோக வெற்றி பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக் கழகத்துக்கு மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சமாஜ்வாதி கட்சி அமோக வெற்றி பெற்றது. மாணவர் சங்கத்தின் 5 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், இணை செயலாளர், கலாசார செயலாளர் ஆகிய 4 பதவிகளை சமாஜ்வாதி கட்சியின் மாணவர் பிரிவு கைப்பற்றியது. பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றியது.

தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சி மாணவர்களுக்கு கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சோஷலிச கொள்கைக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்த வெற்றி என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

விளையாட்டு

5 mins ago

தமிழகம்

4 mins ago

விளையாட்டு

12 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

36 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

11 hours ago

மேலும்