அமமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் தினகரன்

By செய்திப்பிரிவு

அமமுக சார்பாக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்:

சோளிங்கர்:

டி.ஜி.மணி, வேலூர் கிழக்கு மாவட்டம் நெமிலி ஒன்றிய கழக செயலாளராக பணியாற்றி வருகிறார்.

பாப்பிரெட்டிபட்டி:

டி.கே.ராஜேந்திரன், தருமபுரி மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வருகிறார்.

நிலக்கோட்டை (தனி):

ஆர். தங்கதுரை, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வருகிறார்.

திருவாரூர்:

எஸ்.காமராஜ், திருவாரூர் மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வருகிறார்.

தஞ்சாவூர்:

எம்.ரெங்கசாமி, கழக பொருளாராகவும், தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

ஆண்டிப்பட்டி:

ஆர்.ஜெயக்குமார், ஆண்டிப்பட்டி ஒன்றிய கழக செயலாளராக பணியாற்றி வருகிறார்.

பெரியகுளம் (தனி):

கே.கதிர்காமு, கழக மருத்துவரணி தலைவராக பணியாற்றி வருகிறார்.

விளாத்திகுளம்:

கே.ஜோதிமணி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக பணியாற்றி வருகிறார்.

தட்டாஞ்சாவடி (புதுச்சேரி):

என்.முருகசாமி, புதுச்சேரி கழக வர்த்தக அணி செயலாளராக பணியாற்றி வருகிறார்.    

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

வர்த்தக உலகம்

40 mins ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்