கர்நாடக தேர்தல் களம் 2019: பாஜக - காங்கிரஸ் நேரடி மோதல்

By நெல்லை ஜெனா

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி அலை வீசிய ஒரே தென் மாநிலம் கர்நாடகா மட்டுமே. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதிலும், மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 17 தொகுதிகளை பாஜக கைபற்றியது. காங்கிரஸ் 9 தொகுதிகளையும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 2 இடங்களிலும் வென்றன. 

பாஜகவும், காங்கிரஸும் வலிமையாக உள்ள மாநிலமான கர்நாடகாவின் தெற்கு பகுதியில் மாநிலக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கும் ஆதரவு தளம் உண்டு. வட கர்நாடகாவிலும், மேற்கு கர்நாடகாவிலும் பாஜக வலிமையாக உள்ளது. எனினும் இந்த பகுதிகளிலும் காங்கிரஸுக்கும் மிக வலிமையான வாக்கு வங்கி உண்டு.

அதேசமயம் பழைய மைசூர் சமஸ்தானம் எனப்படும் கர்நாடகாவின் தெற்கு பகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதாதளம் வலிமையான அரசியல் அமைப்பாக உள்ளது. இந்த பகுதியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவை விடவும் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு சற்று அதிகமான வாக்கு வங்கி உண்டு. லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகர்கள் சமூகம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் முக்கிய சமூகங்கள். 

 

2014- மக்களவை தேர்தல், கர்நாடகா
 

கட்சி

தொகுதிகள் (28)

வாக்கு சதவீதம் (%)

பாஜக

17

43

காங்கிரஸ்

9

40.80

மதச்சார்பற்ற ஜனதாதளம்

2

11

இதர கட்சிகள் 

0

5.2

 

கடந்த ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இங்கு அரசியல் கணக்கு அதிகமாகவே மாறியுள்ளது. ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு கைகோர்த்து அங்கு ஆட்சியமைத்துள்ளன. அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியான போதிலும், ஆட்சியமைக்க முடியாத ஆத்திரத்தில் உள்ள பாஜக வாய்ப்புக்காக காய் நகர்த்தி வருகிறது.

பாஜகவுக்கு எதிரான அணியில் காங்கிரஸுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் கைகோர்த்துள்ளபோதிலும், அதன் தாக்கம் இந்த மாநிலத்தில் எந்த அளவுக்கு இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

 

2009- மக்களவை தேர்தல், கர்நாடகா
 

கட்சி

தொகுதிகள் (28)

வாக்கு சதவீதம்

பாஜக

19

41.63

காங்கிரஸ்

6

37.65

மதச்சார்பற்ற ஜனதாதளம்

6

13.57

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

சினிமா

17 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

49 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்