176 - பட்டுக்கோட்டை

By செய்திப்பிரிவு

பட்டுக்கோட்டை நகராட்சியின் 33 வார்டுகள், பட்டுக்கோட்டை ஒன்றியத்தின் 33 ஊராட்சிகள், மதுக்கூர், அதிராம்பட்டினம் போரூராட்சிகளை உள்ளடக்கிய தொகுதி.

பட்டுக்கோட்டையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தாலுகா காவல் நிலையம், கரம்பயம், கீழக்குறிச்சியில் புதிய துணை மின் நிலையங்கள், பட்டுக்கோட்டை நகராட்சி பொன்விழாவையொட்டி தமிழக அரசின் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை புதிய வரவுகள்.

கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், பட்டுக்கோட்டை பேருந்து நிலைய அவலத்துக்கு தீர்வு காண புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், நகரில் சாக்கடை பிரச்சினை தீர்வு காண புதைச் சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும். பல கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையத்தை முறையாக இயங்கச் செய்ய வேண்டும். மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்கான வசதிகள் இல்லாமல் திண்டாடும் பட்டுக்கோட்டை அரசுப் பொது மருத்துவமனை மீது உரிய கவனம் செலுத்த வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பாசன ஏரிகள், குளங்களை தூர்வாரி, சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். பல ஆண்டுகளாக தடைபட்டுள்ள திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை முடித்து ரயில் போக்குவரத்தை தொடக்க வேண்டும் என்பன தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள்.

முத்தரையர், வெள்ளாளர், கள்ளர், அகமுடையார், முஸ்லிம், செட்டியார் சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.

கடந்த 1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 சட்டப்பேவைத் தேர்தல்களில், 5 முறை காங்கிரஸ், 3 முறை திமுக, 3 முறை அதிமுக, 2 முறை பிரஜா சோஷலிஸ்டு வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006 தேர்தலிலும், 2011 தேர்தலிலும் காங்கிரஸின் என்.ஆர். ரெங்கராஜன் தொடர்ந்து வெற்றிபெற்று தொகுதியை தக்கவைத்துள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

சி.வி. சேகர்

அதிமுக

2

க. மகேந்திரன்

காங்கிரஸ்

3

நா. செந்தில்குமார்

தேமுதிக

4

பா. லெட்சுமி

பாமக

5

மு. முருகானந்தம்

பாஜக

6

க. கீதா

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பட்டுக்கோட்டை வட்டம் (பகுதி)

நெம்மேலி, கீழக்குறிச்சி மேற்கு, கீழக்குறிச்சி கிழக்கு, ஆவிக்கோட்டை, பாவாஜிக்கோட்டை, பாலாஜிரகுராமசமுத்திரம், கழிச்சாங்கோட்டை,கனியாக்குறிச்சி, ஓலையக்குன்னம், மோகூர், அண்டமி, கருப்பூர், புலவஞ்சி, மகாதேவபுரம், முசிறி, ஆலத்தூர், வடுகன்குத்தகை, செம்பளூர்,எட்டுபுலிக்காடு, கரம்பையம், வேப்பங்காடு, உக்கடை, வேப்பங்காடு ஏனாதி, பாலமுக்தி, ஆலடிக்குமுளை, சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி, செண்டாங்காடு, திட்டக்குடி, தளிக்கோட்டை, ஆலம்பள்ளம், வேப்பங்குளம், மதுக்கூர், கோபாலசமுத்திரம், பெரியகோட்டை, சொக்கனாவூர், புளியக்குடி, காடதங்குடி, மதுரபாசாணிபுரம், விக்கிரமம், வாடியக்க்காடு, மூத்தாக்குறிச்சி, நாட்டுச்சாலை, அத்திக்கோட்டை, சூரப்பள்ளம், சாந்தான்காடு, கரகவாயல், நைநான்குளம், முதல்சேரி, அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, வெண்டாக்கோட்டை, காசாங்காடு, ரெகுநாதபுரம்,வாட்டக்குடி உக்கடை, வட்டாக்குடி. அத்திவெட்டி மேற்கு, அத்திவெட்டி கிழக்கு, பொன்குண்டு, இளங்காடு, கரப்பங்காடு, சிரமேல்குடி, ரெகுராமசமுத்திரம், பாலாயிஅக்ரஹாரம்,கல்யாணஓடை, பழவேறிக்காடு மன்னங்காடு, துவரங்குறிச்சி வடக்கு, துவரங்குறிச்சி தெற்கு, பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், தாமரங்கோட்டை வடக்கு, தாமரங்கோட்டை தெற்கு, பரககலக்கோட்டை, கிருஷ்ணபுரம், தம்பிக்கோட்டை வடகாடு, புதுக்கோட்டகம், சௌந்தரநாயகிபுரம் நரசிங்கபுரம், சின்ன ஆவுடையார்கோயில், மகிழன்கோட்டை, சத்திரம் தொக்காலிக்காடு, தொக்காலிக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் ராஜாமடம் கிராமங்கள்,

மதுக்கூர் (பேரூராட்சி), பட்டுக்கோட்டை (நகராட்சி) மற்றும் அதிராம்பட்டினம் (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,09,204

பெண்

1,17,958

மூன்றாம் பாலினத்தவர்

23

மொத்த வாக்காளர்கள்

2,27,185

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

1952

நாடிமுத்துபிள்ளை

இந்திய தேசிய காங்கிரஸ்

1957

R.சீனிவாசஅய்யர்

இந்திய தேசிய காங்கிரஸ்

1962

வி.அருணாச்சலதேவர்

இந்திய தேசிய காங்கிரஸ்

1967

ஏ.ஆர்.மாரிமுத்து

பிரஜா சோசலிச கட்சி

1971

ஏ.ஆர்.மாரிமுத்து

பிரஜா சோசலிச கட்சி

1977

ஏ.ஆர்.மாரிமுத்து

இந்திய தேசிய காங்கிரஸ்

1980

எஸ்.டி.சோமசுந்தரம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1984

பி.என்.இராமச்சந்திரன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1989

கா.அண்ணாதுரை

திராவிட முன்னேற்றக் கழகம்

1991

கே.பாலசுப்பிரமணியம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1996

ஏனாதி.பாலசுப்பிரமணியம்

திராவிட முன்னேற்றக் கழகம்

2001

N.R.ரெங்கராஜன்

தமாகா

2006

N.R.ரெங்கராஜன்

இந்திய தேசிய காங்கிரஸ்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

N.R. ரெங்கராஜன்

காங்கிரஸ்

58776

2

S. விஸ்வநாதன்

ம.தி.மு.க

43442

3

N. செந்தில்குமார்

தே.மு.தி.க

10688

4

P. ஜெயபால்

சுயேச்சை

6230

5

S. தெளபீக்

பி.எஸ்.பி

3931

6

M. ரவிசந்திரன்

பி.ஜே.பி

2029

7

சாமிநாதன் சின்னா

எ.ஐ.எப்.பி

822

125918

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

N.R. ரெங்கராஜன்

காங்கிரஸ்

55482

2

N. செந்தில்குமார்

தே.மு.தி.க

46703

3

A.R.M. யோகானந்தம்

சுயேச்சை

22066

4

V. முரளி கணேஷ்

பி.ஜே.பி

10164

5

S. செந்தில்குமார்

சுயேச்சை

6775

6

A. சரவணன்

ஐ.ஜே.கே

1424

7

A. ஐரீன்

சுயேச்சை

1358

8

R. சிங்காரவடிவேலன்

சுயேச்சை

1195

9

C. இன்பரசன்

பி.எஸ்.பி

1186

146353

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

விளையாட்டு

56 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்