வாக்கு வங்கி அரசியல் செய்கிறார் மம்தா: மோடி தாக்கு

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி வாக்கு வங்கி அரசியலை மட்டுமே நடத்தி வருவதாக, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார்.

மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் அவர் இன்று மேற்கொண்ட பிரச்சாரத்தில் பேசியது:

"மேற்கு வங்கத்தில் முதல்வராக மம்தா பதவியேற்ற பிறகு நல்ல மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால், இங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இங்கு வாக்கு வங்கு அரசியலைதான் மம்தா செய்து வருகிறார்.

மம்தாவுக்கு என்னைப் பற்றி விமர்சனம் செய்யவில்லை என்றால், சாப்பிட்ட உணவே செரிக்காது. திரிணமூல் காங்கிரஸ் இங்கு ஆட்சி அமைத்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை இங்கு ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? இங்குள்ள மக்கள் திரிணமூல் அரசால் நன்கு ஏமாற்றப்பட்டுள்ளனர். இங்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது அனைத்தும் போலியானவை. தற்போது மேற்கு வங்கத்தில் உண்மையான மாற்றத்தை காணும் நேரம் வந்துவிட்டது.

டெல்லியில் முற்போக்கு சிந்தனை உள்ள அரசு அமைந்தால் மட்டுமே, எந்த ஒரு காரியமும் நிறைவேறும். மேற்கு வங்க முதல்வர் சேற்றை வாரி வீசும்போதெல்லாம் தாமரை மலர்ந்து கொண்டே இருக்கும்.

சாரதா நிதி நிறுவன மோசடி பிரச்சினையில், திரிணமூல் கட்சி பெரும் பங்கு வகிக்கிறது. மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறைந்த நேரத்தில் பெரிய மோசடிகளை திரிணமூல் அரசு செய்துள்ளது என்றால், அதிக வாய்ப்பையும் நேரத்தையும் கொடுத்தால் மக்கள் என்ன ஆவார்கள்?

திரிணமூல் கட்சிக்கு இம்முறை எந்த ஒரு வாய்ப்பும் அளிக்க கூடாது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால்தான் மக்கள் உண்மையான முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் காண முடியும்.

காங்கிரஸுக்கு 60 ஆண்டுகளை கொடுத்தீர்கள். பாஜகவுக்கு 60 மாதங்களை மட்டும் தந்து பாருங்கள், உண்மையான வளர்ச்சியை மேற்கு வங்கம் காணும்" என்றார் நரேந்திர மோடி.

இதுவரை மம்தா பானர்ஜி குறித்து மோடி விமர்சித்து பேசாமல் இருந்தார். சமீபத்தில் நடைபெற்ற அனைத்து பொதுக் கூட்டங்களிலும் நரேந்திர மோடியை மம்தா பானர்ஜி குஜராத் கலவரத்தை முன்வைத்து கடுமையாக தாக்கி பேசினார். இதையடுத்து, இன்று மேற்கொண்ட பிரசசாரத்தில் மம்தா பானர்ஜியை நரேந்திர மோடி கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்