இந்தியில் ரீமேக்காகிறது ரெமோ: பி.சி.ஸ்ரீராம் தகவல்

By ஸ்கிரீனன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ரெமோ', இந்தியில் ரீமேக் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பி.சி.ஸ்ரீராம் தெரிவித்தார்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். ராஜா தயாரிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பெரும் வசூல் செய்தது.

அதனைத் தொடர்ந்து தில் ராஜூ, இப்படத்தை தெலுங்கில் வெளியிட்டார். அங்கும் இப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 'ரெமோ' தெலுங்கு படத்தின் வெற்றி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மொத்த படக்குழுவினரும் பங்கேற்றார்கள்.

இதில் பேசிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், "இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முன்னணி இந்தி நடிகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 24 ஏ.எம். நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது" என்று தெரிவித்தார்.

'ரெமோ' படத்தைத் தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்