அபர்ணா பாலமுரளி பிறந்தநாள் - வெளியானது படத்தின் போஸ்டர்

By செய்திப்பிரிவு

நடிகை அபர்ணா பாலமுரளி பிறந்த நாளையொட்டி அவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

2016-ம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் அபர்ணா பாலமுரளி. முன்னதாக அவர் மலையாளத்தில் 'மஹேஷின்டே பிரதிகாரம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து தமிழில் 2019இல் வெளிவந்த ‘சர்வம் தாள மயம்' படத்தில் நடித்தார். அண்மையில் 'சூரரைப்போற்று' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை அபர்ணா பாலமுரளியின் பிறந்த நாளையொட்டி அவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அசோக் செல்வனுடன் இணைந்து அவர் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திக் இப்படத்தினை இயக்கியுள்ளார். வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த போஸ்டரை வெளியிட்ட படக்குழு அபர்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்