4 முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் தனுஷ்

By செய்திப்பிரிவு

தெலுங்குத் திரையுலகின் 4 முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

'மாறன்', 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இந்தப் படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 'நானே வருவேன்' படத்துக்குத் தேதிகள் கொடுத்துள்ளார்.

இந்தப் படங்களை எல்லாம் முடித்துவிட்டு, சேகர் கம்முலா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதனைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்றொரு தெலுங்குத் திரையுலகின் இயக்குநரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதனையும் தெலுங்குத் திரையுலகின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளது.

இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து, தெலுங்குத் திரையுலகில் இன்னும் 2 தயாரிப்பு நிறுவனங்களின் படங்களிலும் நடிக்கவுள்ளார் தனுஷ். 'ஆர்.ஆர்.ஆர்' படத்தைத் தயாரித்து வரும் டிவிவி நிறுவனம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தனுஷிடம் பேசி கால்ஷீட் வாங்கியுள்ளன. இந்தப் படங்களை யார் இயக்கவுள்ளார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்